மதுரை மீனாட்சி அம்மன் குறித்து முகநூலில் கீழ்தரமான பதிவு : புகார் அளித்த இமக மாநில செயலாளர்; விரைவில் கைதாக வாய்ப்பு…?

Scroll Down To Discover
Spread the love

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, தமிழகத்தில் உள்ள பிரபலமான அனைத்து கோயில்களிலும் பக்தர்கள தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரசித்த பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலும் இந்த தடை உள்ளது.இந்த நிலையில், சித்தரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்ச்சி இன்று (மே 4 ) நடைபெற்றது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து ஒரு சிலர் அறுவருக்கதக்க வகையில் முகநூலில் பதிவு செய்து இருந்தனர். இதனை இந்து இயக்கங்கள் கடுமையாக கண்டித்து உள்ளது. இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறையினரிடம் வலியுறுத்தி வருகிறார்கள்.

இது தொடர்பாக இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் பிரதீப் குமார் என்ற (கொக்கிகுமார்) புதுக்கோட்டை எஸ்பி அலுவலகத்தில் ஆன்லைனில் புகார் அளித்து உள்ளார்.

அவர் அளித்து அந்த புகாரில்:- ஐயா வணக்கம், நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். மேலும் இந்து மக்கள் கட்சியில் மாநில செயலாளராக இருந்து வருகிறேன். முகநூலில் கொக்கி குமார் எனும் பெயரில் பயணிக்கிறேன்.அதே முகநூலில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்த மனோகரன் என்பவர் மதுரை மீனாட்சி அம்மன், இந்து மதத்தையும், இந்து கடவுள்களையும், மத்திய அரசையும், பாரதப்பிரதமரையும், தொடர்ந்து மிகவும் கீழ்தரமாக விமர்சித்து வருகிறார். இது மக்களிடையே சாதி மத மோதல்களை தூண்டும் விதமாகவும். பெரும்பானன்மை மக்களின் மனதை புண்படுத்தும் விதமாகவும் இருக்கிறது.
விபரங்கள் கீழ்வருமாறு:
1: இது அவரது ஐடி லிங்க்

https://www.facebook.com/profile.php?id=100004468066182

2: மீனாட்சியம்மனை கேவலமாக விமர்ச்சித்த பதிவின் லிங்க்

https://m.facebook.com/story.php?story_fbid=1651323658359887&id=100004468066182

3: இந்து மதத்தை கேவலமாக விமர்சித்த பதிவின் லிங்க்
https://m.facebook.com/story.php?story_fbid=1631289187030001&id=100004468066182

4: பொய் செய்திகளை போட்டு அவதூறு பரப்பிய பதிவின் லிங்க்கள்
https://m.facebook.com/story.php?story_fbid=1618341261658127&id=100004468066182

https://m.facebook.com/story.php?story_fbid=1615623665263220&id=100004468066182

5: மாண்புமிகு பாரதப்பிரதமரை கேவலமாக சித்தரித்த வீடியோ
https://m.facebook.com/story.php?story_fbid=1620586158100304&id=100004468066182

இன்னும் அவரது ஐடியில் பல பதிவுகள் எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே ஐயா அவர்கள் தயவுசெய்து மேற்குறிப்பிட்ட மனோகர் என்ற நபர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் :- கீழ்தரமாக பதிவிட்ட மனோகரன் என்ற நபர் மீது காவல்துறைக்கு ஆன்லைனிலும், புதுக்கோட்டை SP திரு.அருண்சக்திக்குமார் அவர்களுக்கும், பொன்னமராவதி DSP திரு.தமிழ்மாறன் அவர்களுக்கும் தனிப்பட்ட முறையிலும் புகார் அளித்து உள்ளேன் என கூறியுள்ளார் பிரதீப் குமார். எனவே விரைவில் இது குறித்து விசாரணை மேற்க்கொண்டு கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
https://twitter.com/chennaipolice_/status/1257680998944239616?s=20
மேலும் இது குறித்து டிவிட்டர் தளத்தில் ஒருவர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியிருந்தார். அந்த பதிவில் சென்னை பெருநகர காவல்துறையினரின் ட்விட்டரில் இருந்து பதில் கூறியுள்ளார்கள்:- தங்களின் இந்த புகாரினை நாங்கள் குறிப்பிட்டு உள்ளோம் என கூறியுள்ளார்கள்.