சிம்புவிற்கு குட்பை கேஜிஎப் நடிகருக்கு ஸ்கிரிப்ட் ரெடி செய்த இயக்குனர்

Scroll Down To Discover
Spread the love

கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடித்து வெற்றிபெற்ற படம் ‘மப்டி’. இப்படத்தை நார்தன் என்பவர் இயக்கி இருந்தார். இப்படத்தின் தமிழ் ரீமேக்கையும் அவரே இயக்கி வந்தார். தமிழில் சிம்பு, கவுதம் கார்த்திக் ஆகியோர் நடித்தனர். விறுவிறுப்பாக முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், சிம்புவுக்கும், தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அடுத்தகட்ட படப்பிடிப்பு நடத்தாமல் கிடப்பில் போட்டனர்.

இந்நிலையில், இயக்குனர் நார்தன், இந்த இடைவேளையில் வேறு ஒரு ஸ்கிரிப்டை தயார் செய்து விட்டாராம். இப்படத்தில் கேஜிஎப் நடிகர் யஷ் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தின் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.  கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்தபின் யஷ், நார்தன் இயக்கும் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.