ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுவோர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் – மாநகராட்சி எச்சரிக்கை

Scroll Down To Discover
Spread the love

சென்னையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், வைரஸை கட்டுப்படுத்தும் பணியில் மாநகராட்சி தீவிரம் காட்டி வருவதாக தெரிவித்துள்ளார். பொதுமக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள், கடைகளில் சமூக இடைவெளி கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும், அவ்வப்போது கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் ஊரடங்கு நேரத்தில் இயங்கும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் கட்டாயம் கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ள மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், கட்டுப்பாடுகளை மீறி இயங்கும் கடைகள், அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டு உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளார். மேலும் கட்டுப்பாடுகளை மீறும் நபர்களுக்கு 100 ரூபாய் வீதம் அபராதம் விதித்து, 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.