கொரோனா நிவாரண நிதி வழங்கிய நக்சல் தாக்குதலில் உயிரிழந்த CAF வீரரின் மனைவி..!

Scroll Down To Discover
Spread the love

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வரும் ஏப்., 14 வரை ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

மேலும் கொரோனா தடுப்பு பணிகளுக்கு மக்கள் பிரதமர் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி அளிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி (மார்ச் 28) வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, டாடா அறக்கட்டளை மற்றும் டாடா குழுமம் ரூ.1500 கோடி நிதி அளிப்பதாக தெரிவித்துள்ளது.இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி தன் பங்குக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.500 கோடியை வழங்கியுள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் முதல் ஆளாக ரூ.25 கோடி நிதி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.ஹீரோ குழுமம் ரூ. 100 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதனிடையே மார்ச் 14-ம் தேதி பஸ்தாரில் நடந்த நக்சல் தாக்குதலில் CAF வீரர் ஒருவர் உயிரிழந்தார். சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த இவரின் மனைவி ராதிகா சாஹு, தற்போது கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்காக சத்தீஸ்கர் முதல்வரின் நிவாரண நிதிக்கு 10,000 ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.


இதுகுறித்து அவர் கூறுகையில், “என் கணவர் எப்போதும் மற்றவர்களுக்கு உதவுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதனால்தான் இதைச் செய்ய முடிவு செய்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.