திட்ட இயக்குனர் வீட்டில் கட்டு கட்டாக லஞ்சப்பணம்…….!

Scroll Down To Discover
Spread the love

விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் மகேந்திரனுக்கு சொந்தமான  திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ள வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக ரொக்க பணம் சிக்கியது.

இது குறித்து விபரம் வருமாறு: தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் ஊரட்சிகளில் வளர்ச்சி பணிகளை மேற்கெ௱ள்ள மத்திய அரசு ஆண்டு தே௱றும் நிதிகளை ஒதுக்கும் இந்த நிதிகளை மாவட்டங்களில் உள்ள கலெக்டர்கள் ஒப்புதலின் படி திட்ட இயக்குநர்கள் மூலமாக வளர்ச்சி பணிகளை ஊராட்சிகளில் மேற்கெ௱ள்வார்கள்

இந்த பதவிக்கு வர பல மாவட்டங்களில் பல லட்சங்களை லஞ்சமாக கொடுத்து வருவார்கள் வந்த உடன் போட்ட முதலை உடனடியாக எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிஎபிடி மற்றும் ஏடி பஞ்சாயத்துளை மிரட்டி யூனியன்களில் உள்ள பிடிஒ மற்றும் ஏபிடிஒக்கள் மூலமாகவும் பொறியாளர்களை அட்ஜட்ஸ் செய்து நிதிகளை மோசம் செய்து விடுவார்கள். இதில் பல மாவட்டங்களில். உள்ள திட்ட இயக்குநர்களுக்கு வுமன்ஸ் திட்ட இயக்குநர்களுக்குமிடையே கோஷ்ட்டி பூசல் நிலவம்…!

இப்படிப்பட்ட கோஷ்ட்டி பிரச்சினையால் மாவட்ட திட்ட இயக்குநர்கள் செய்யும் மோசடிகளை ஆதாரத்துடன் லஞ்ச ஒழிப்புக்கு தகவல் கொடுக்கிறார்கள் இதன் எதிரொலியாக லஞ்ச ஒழிப்பு போலீசார் நோட்ட மிடுவார்கள் அதிலும் உயர் அதிகாரிகள் என்றால் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேலிடத்து உத்தரவு பெற்ற பின் ஆப்பரேஷனை கச்சிதமாக முடிக்கிறார்கள் அந்த விதத்தில் தான் விழுப்புரம் மாவட்ட திட்ட இயக்குநர் மகேந்திரன் சிக்கினார் ,இந்த சம்பவம் திட்ட இயக்குநர்களிடையே பெரும் பரபரப்பானது

லஞ்ச ஒழிப்பு துறை நிலக்கோட்டையில் உள்ள மகேந்திரன் வீட்டில் சோதனை இட்ட பின் தான் பல திடுக்கிடும் தகவல்கள் அடுக்கடுக்காக தெரிய வந்தன அதாவது விழுப்புரம் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்ப்பட ஊராட்சிகள் உள்ளன, இதோடு திட்ட இயக்குநரான மகேந்திரன் கடலூர் மாவட்டத்தையும் கூடுதல் பொறுப்பாக கடந்த 6 ஆண்டாக கவனித்து வந்துள்ளார்

பல கோடிகள் லஞ்ச பணங்கள் புரண்டோடின இதனால் யாரையும் மதிப்பதும் இல்லை இதே பாணியை பின்பற்றி தான் புதுக்கோட்டை மாவட்ட திட்ட இயக்குநரான மாலதியும் புதுக்கோட்டை மாவட்டத்தின் திட்ட பணிகளை மொட்டை அடித்துள்ளாராம் அதனால் தான் லஞ்ச ஒழிப்புத்துறை ஒரே கல்லில் இரண்டு ஊழல் மாங்காய் அடித்துள்ளனர்….தோண்ட தோண்ட மகேந்திரனின் ஊழல் ராஜாங்கம் வெளியே வந்து கொண்டிருக்கின்றன அதாவது தனக்கு ஏடிஆர்டி ஆக பதவி உயர்வு பெற நைசாக கரண்சியை வைத்து காய் நகர்த்தியுள்ளார்…., காரணம் ஏடிஆர்டி பதவி வந்தால் ஐஏஎஸ் பதவியை ஈசியாக வாங்கிவிடலாம்…

மத்திய பாஜக அரசு மக்கள் பணிக்காக ஒதுக்கும் நிதிகளை இது போன்ற திட்ட இயக்குநர்கள் எப்படி எல்லாம் ஏப்பமிடுகிறார்கள் என்பது மகேந்திரன் வீட்டில் கிடைத்த பல கோடிகளே ஆதாரம். இதில் விசித்திரம் என்ன என்றால் 6 வருடமாக இரண்டு மாவட்டங்களில் திட்ட இயக்குநராக உள்ளார் டிஆர்டி அலுவலத்திலும் ஆர்டி செகரட்டரி & கோவுக்கும் சப்ளை & சர்வீஸ் செய்த மகேந்திரன்  உயர் அதிகாரிகளின் மத்தியில் தன்னை காந்திய வாதி போல் எப்படி நடித்தாலும் சாயம் ஒரு நாள் வெளுக்கத்தானே செய்யும். இதே போல் தான் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் திட்ட இயக்குனர்கள் இப்படி மத்திய மாநில அரசுகளை ஏமாற்றி ஜமீந்தாராக வலம் வருகிறார்கள் என்பது லஞ்ச ஒழிப்பில் சிக்கிய திட்ட இயக்குநரான மகேந்திரன் மூலமாக வெளிச்சத்தில் வந்துள்ளன என்பது தான்   உண்மை.