ஊரடங்கு நீடிப்பு – மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பில் உள்ளது : யாரும் கவலைப்பட வேண்டாம் – அமித்ஷா

Scroll Down To Discover
Spread the love

உலகம் முழுவதும் 199க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பு ஏற்படுத்திய கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவிலும் தீவிரமடைந்தது. இதனை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ந்தேதி அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார். இந்த உத்தரவு இன்றுடன் நிறைவடைகிறது.இதனை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடையே இன்று காலை 10 மணியளவில் உரையாற்றினார். அவர் பேசும்பொழுது, மே 3ந்தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டார்.

இந்த நிலையில் மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள், மருந்துகள், அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் தேவையான அளவுக்கு கையிருப்பில் உள்ளன, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதை நினைத்து யாரும் கவலைப்படத் தேவையில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.


இது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டிவிட்டர் பக்கத்தில்:- உங்கள் அருகில் வாழும் ஏழை மக்களுக்கு உதவி செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார்.ஒரு உள்துறை அமைச்சராக நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன், நாட்டு மக்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் இருப்பில் உள்ளது.


ஒருவரும் கவலைப்பட வேண்டாம். மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்புக் கொடுக்கும் மாநில அரசுகளின் பங்களிப்பு பாராட்டத்தக்கது என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முன்னின்று போராடும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினரின் பணி மகத்தானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.