சித்திரை விஷு : சபரிமலை நடை இன்று திறப்பு – பக்தர்களுக்கு அனுமதி கிடையாது..!

Scroll Down To Discover
Spread the love

சித்திரை விஷு சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (13ம் தேதி) திறக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற விஷுக்கனி தரிசனம் நாளை அதிகாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமலில் இருப்பதால் இவ்வருடம் சித்திரை விஷு பூஜைகளில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட மாட்டார்கள் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஏற்கனவே அறிவித்திருந்தது. இன்று மாலை 5 மணிக்கு கோயில் தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறப்பார்.

இன்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. நாளைமுதல் 18ம் தேதி வரை சித்திரை விஷுசிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் சம்பிரதாய முறைப்படி மட்டுமே சடங்குகள் நடைபெறும். 18ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும்.நெய்யபிஷேகம், அஷ்டாபிஷேகம், களபாபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, படிபூஜை, சகஸ்ரகலசம், புஷ்பாபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.குறைவான ஊழியர்கள் மட்டும் வருவார்கள். பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பூஜைகளுக்காக நடை திறந்திருக்கும் நேரமும் குறைக்கப்பட்டுள்ளது.