இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 473 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்..!

Scroll Down To Discover
Spread the love

இந்தியாவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் நோயாளிகளுக்கென நாடு முழுவதும் 80 ஆயிரம் படுக்கை வசதிகள் தயாராக இருப்பதாக இன்று பேட்டி அளித்த சுகாதார துறை அமைச்சக இணை செயலர் லாவ்அகர்வால் மற்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது வரை 5,734 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில் 473 பேர் குணமாகியுள்ளனர். 166 பேர் உயிரிழந்துள்ளனர். 5,095 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா வைரசுக்கு 17 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 540 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். 49 ஆயிரம் வென்டிலேட்டர்கள் வாங்க ஆர்டர் செய்துள்ளோம். நாட்டில் தவிக்கும் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு சார்பிலான 10 சிறப்பு குழுக்கள் 9 மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இந்தியா முழுவதும் 80ஆயிரம் தனி படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. முககவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் 1.7 கோடி வாங்க ஆர்டர் செய்துள்ளோம். மக்கள் யாரும் பீதி அடைய தேவையில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.