நீங்கள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் : காவல்துறையினருக்கு ஆரத்தி எடுத்து வாழ்த்திய பாட்டி..!

Scroll Down To Discover
Spread the love

இந்தியாவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வரை 5,734 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில் 473 பேர் குணமாகியுள்ளனர். 166 பேர் உயிரிழந்துள்ளனர். 5,095 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா வைரசுக்கு 17 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 540 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் மக்கள் வெளியே நடமாடாமல் வீடுகளுக்கு உள்ளேயே தனிமையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக காவல்துறையினர் இரவு பகலாக பொதுமக்கள் வெளியே நடமாடாமல் பார்த்து கொள்ளுகிறார்கள்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் நோய் பரவாமல் இருக்க அரசு விதித்த 144 தடை உத்தரவின்படி தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினருக்கு அதே பகுதியில் காய்கறி விற்பனை செய்யும் ராஜம்மாள் என்ற மூதாட்டி ஆரத்தி எடுத்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று வாழ்த்தினார்.