சபரிமலை சித்திரை மாத பூஜை நடை திறப்பு : பக்தர்களை அனுமதிப்பதில்லை – தேவசம் போர்டு முடிவு

Scroll Down To Discover
Spread the love

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, சபரிமலை அய்யப்பன் கோவிலில், பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா நடைபெறவில்லை. சித்திரை விஷு விழாவுக்காக, ஏப்., 10ல் நடை திறப்பதாக இருந்தது. அதுவும் ரத்து செய்யப்பட்டு, சித்திரை மாத பூஜைக்காக மட்டும் நடை திறக்க, தேவசம் போர்டு முடிவு செய்தது.

இதன்படி, ஏப்., 13 மாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்படும். இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். 15ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறந்து, வழக்கமான பூஜைகள் நடைபெறும். படி பூஜை போன்ற சிறப்பு பூஜைகள் எதுவும் கிடையாது. தொடர்ந்து, 18ம் தேதி இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். இந்த நாட்களில், பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. 15ம் தேதி ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், பக்தர்களை அனுமதிப்பதில்லை என, தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது.