உச்சநீதிமன்ற நீதிபதிகள் 33 பேர் தலா ரூ.50 ஆயிரம், பிரதமர் பேரிடர் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினர்.

Scroll Down To Discover
Spread the love

கொரோனா பாதிப்புக்கான நிவாரண உதவி வழங்க, மத்திய அரசு, PM-CARES Fund எனப்படும், குடிமக்கள் உதவி மற்றும் அவசர கால நிவாரண நிதியத்தை துவக்கியுள்ளது. இதில் திரட்டப்படும் தொகை, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும். இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, நிதியுதவி செய்யும்படி, கடந்த, மார்ச் 28ம் தேதி, நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, தொழில் நிறுவனங்கள், தொழிலதிபர்கள், பாலிவுட் பிரபலங்கள் என பலரும் தங்கள் பங்களிப்பை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 33 பேர், தலா ரூ. 50,000 பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்க உள்ளனர். தொடர்ந்து அனைத்து ‘கெஜடட்’ அதிகாரிகளும், தங்கள், மூன்று நாள் சம்பளத்தையும், கெஜடட் அல்லாத அதிகாரிகள், இரண்டு நாள் சம்பளத்தையும், ‘குரூப் சி’ ஊழியர்கள், ஒரு நாள் சம்பளத்தையும், பிரதமரின் நிவாரண நிதிக்கு, நன்கொடையாக வழங்குவர். இந்த நன்கொடை, மார்ச் மாத சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என பதிவாளர் தெரிவித்திருந்தார்.நீதிபதி ரமணா ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்கியுள்ளார்.