சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி – மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு

Scroll Down To Discover
Spread the love

இந்தியாவை அச்சுறுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பல மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு டில்லி நஜாமுதீனில் நடந்த தபிலீகி ஜமாத் நடத்திய மத பிரசங்க கூட்டம் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சிபிஎஸ்இ 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவார்கள் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அதன்படி, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை, மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுகிறார்கள். 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள், நடப்பு கல்வி ஆண்டில் பருவமுறைத் தேர்வு, பயிற்சித் தேர்வு, செய்முறைத் தேர்வு போன்ற மற்ற தேர்வுகளில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை வைத்து தேர்ச்சி செய்யப்படுவார்கள். 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://twitter.com/HRDMinistry/status/1245343888958611456?s=20
முன்னதாக, தமிழகம், புதுச்சேரி, உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநில அரசுகள், மாநில பாடத்திட்டத்தில் பயிலும் (1 முதல் 9 ஆம் வகுப்பு வரை) மாணவர்கள் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்படுவார்கள் என அறிவித்த நிலையில், சிபிஎஸ்இ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.