சபரிமலை கோவில் தொடர்பான வழக்குகளுக்கு பிறகு குடியுரிமை திருத்த சட்ட வழக்குகள் விசாரணை- உச்சநீதிமன்றம் அறிவிப்பு

Scroll Down To Discover
Spread the love

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, ஐ.யு.எம்.எல், எனப்படும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உட்பட பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில், ஐ.யு.எம்.எல். சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரிக்க வேண்டும்’ என நேற்று வலியுறுத்தினார். மேலும் மத்திய அரசு இதுவரை பதில் மனுவை தாக்கல் செய்யவில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

பின்னர் அடுத்த சில நாட்களில் பதில் மனுவை தாக்கல் செய்வதாக அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் தெரிவித்தார். இதையடுத்து சபரிமலை தொடர்பான வழக்குகள் விசாரணைக்குப் பின் குடியுரிமை திருத்த சட்டம் , தொடர்பான வழக்கு விசாரிக்கப்படும்’ என, அமர்வு கூறியுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதை எதிர்த்து, சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பெண்களுக்கு எதிரான பிரச்னைகள் குறித்து விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் கூறியது. அதன்படி, ஒன்பது பேர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. ஹோலி பண்டிகையை யொட்டி, உச்ச நீதிமன்றத் துக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும், 16ல் மீண்டும் அந்த வழக்கின் விசாரணை துவங்க உள்ளது. இதற்கிடையே, ஹோலி பண்டிகை விடுமுறையின்போது, அவசர வழக்குகளை விசாரிப்பதற்காக, விடுமுறை கால அமர்வு அமைக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.