டெல்லி நீதிபதி முரளீதர் இடமாற்றம்: வழியனுப்பு விழாவில் அனைத்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்..!!

Scroll Down To Discover
Spread the love

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளீதரை பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்துக்கு பணியிடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியத்தால் பிப்ரவரி 12-இல் பரிந்துரைக்கப்பட்டது. இந்த பரிந்துரையை ஏற்று மத்திய சட்டத் துறையும் அவரை பிப்ரவரி 26-இல் பணியிடமாற்றம் செய்வதற்கான அறிவிக்கையை வெளியிட்டது. ஆனால் மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையின் நேரம்தான் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வடகிழக்கு தில்லி பகுதியில் நிகழ்ந்த வன்முறை தொடர்பான வழக்கை நீதிபதி முரளீதர் விசாரித்தார். அப்போது வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன் என்பது குறித்து தில்லி காவல் துறையினரிடம் கடுமையான கேள்விகளை முன்வைத்தார்.

இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை நடத்திய சில மணி நேரங்களிலேயே இவர் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்படுவது தொடர்பான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. எனவே இது சர்ச்சைக்குள்ளானது.

இந்நிலையில், அவருக்கான வழியனுப்பு விழா தில்லி உயர் நீதிமன்றத்தின் மைய கட்டடத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.


இதிபேசிய நீதிபதி முரளீதர் அவர்கள்:- பணியிடமாற்றம் குறித்து என்னிடம் பிப்ரவரி 17-ஆம் தேதி தகவல் தெரிவிக்கப்பட்டது. எனக்கு அதில் எந்தப் பிரச்னையும் இல்லை. என்னுடைய பணியிடமாற்றத்துக்கான கொலீஜியத்தின் பரிந்துரை குறித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்தேவின் தகவல் பிப்ரவரி 17-ஆம் தேதி எனக்கு வந்து சேர்ந்தது. இந்த தகவலுக்கு தில்லி உயர் நீதிமன்றத்தில் இருந்து பணியிடமாற்றம் செய்யப்பட வேண்டுமானால் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்துக்கு செல்வதில் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று பதிலளித்தேன்” என்றார்.