வீடில்லா திருநங்கைகளுக்கு வீடு கட்டித்தரும் லாரன்ஸ் அறக்கட்டளைக்கு பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ரூ.1.5 கோடி நிதி வழங்கினார்.

Scroll Down To Discover
Spread the love

காஞ்சனா படத்தின் முதல் பாகத்தை இந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் லாரன்ஸ் இயக்கி வருகிறார். அக்‌ஷய் குமார், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகர்,இயக்குனர்,டான்சர் என பன்முகத்திறமை கொண்ட ராகவா லாரன்ஸ், சமூக நலப்பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். அதற்காக அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார். 15 ஆண்டுகளாக இந்த அறக்கட்டளையை நடத்தி வரும் அவர், வீடில்லாத திருநங்கைகளுக்கு வீடு கட்டித்தர திட்டமிட்டிருந்தார்.


லட்சுமி பாம் படத்தின் படப்பிடிப்பின் போது இந்த திட்டம் தொடர்பாக அக்‌ஷய் குமாரிடம் லாரன்ஸ் தெரிவித்துள்ளார். உடனே அக்‌ஷய் குமார் இந்த திட்டத்திற்காக 1.5 கோடி ரூபாய் கொடுத்து உதவியதாக ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.