கொரோனா வைரஸ் : சீனா, வன விலங்குகளை விற்கவும் உண்ணவும் தடை

Scroll Down To Discover
Spread the love

சீனாவின் வுஹான் நகரில் உருவான கொரோனா வைரசால், சீனாவில் இதுவரை,2500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் 77,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு வெளியே, 30 நாடுகளில், 1200 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வேகமாகப் பரவிவரும் வைரசை கட்டுப்படுத்த, முழுமையான முயற்சிகளை சீன அரசு எடுத்திருந்தாலும், அதில் வெற்றி கொள்ள முடியாமல் திணறி வருகிறது சீனா

இந்நிலையில், ‘சீனாவில் நடைபெறும் வனவிலங்குகள் வர்த்தகமே இந்த வைரஸ் தோன்றியதற்கும் பரவியதற்கும் காரணம்’ எனவும், ‘சீனர்கள் விரும்பி உண்ணும் ஏதோவொரு விலங்கிடமிருந்தே இந்த வைரஸ் தொற்று மனிதர்களுக்கு பரவியிருக்கிறது’ என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சீனாவில் வனவிலங்குகளை விற்கவும் உண்ணவும் உடனடித் தடையை, சீன அரசு அமல்படுத்தியுள்ளது. இதற்கு, சீன பாராளுமன்றத்தின் உயர்மட்ட கமிட்டி ஒப்புதல் வழங்கியுள்ளது.சார்ஸ் வைரஸ் பரவிய போது, வனவிலங்கு வர்த்தகத்துக்கு மட்டும், சீன அரசு இடைக்கால தடை விதித்திருந்தது.