நேதாஜி பிறந்தநாள்- சென்னை ஆளுநர் மாளிகையில் 6 அடி உயர வெண்கல சிலையை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்..!

Scroll Down To Discover
Spread the love

நேதாஜியின் 123-வது பிறந்தநாளையொட்டி சென்னை ஆளுநர் மாளிகையில் 6 அடி உயர வெண்கல சிலையை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைத்துள்ளார். நேதாஜி சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நேதாஜி சிலை திறப்பு விழாவில் பங்கேற்று பேசிய  குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு:- சாதி, மதத்தின் பெயரால் பிரிவு ஏற்படுத்துவதை ஏற்க முடியாது என  தெரிவித்துள்ளார். இந்து, முஸ்லீம், கிருஸ்தவர்கள் என இங்கு வாழும் அனைவரும் இந்தியர்களே. சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த சரியான தகவல்களை பாடப்புத்தகங்களில் சேர்க்கவில்லை. சாவர்க்கர் பற்றி தவறான தகவலும், ராபர்ட் கிளைவ் பற்றி உயர்வாகவும் புத்தகங்களில் எழுதப்பட்டுள்ளன எனவும் கூறியுள்ளார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசியபோது:- தூய்மை இந்தியா குறித்து தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து ஆளுநர் பன்வாரிலால் பாராட்டு பெற்றுள்ளார். விடுதலைக்கான வேள்வியை வளர்த்த நேதாஜி, ஜெய்ஹிந்த் என்ற வார்த்தைக்கு உயிர் கொடுத்தார் என்றார்..!