வேலை தேடுவோர் கவனதிற்கு.! சென்னையில் பிப்ரவரி 3-தேதி வேலைவாய்ப்பு முகாம் ..!

Scroll Down To Discover
Spread the love

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் வேலைவாய்ப்பு தலைமை இயக்ககங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய வேலைவாய்ப்பு சேவை மையம் சென்னையில் பிப்ரவரி மூன்றாம் தேதி வேலைவாய்ப்பு கண்காட்சி மற்றும் முகாம் ஒன்றை தியாகராய நகர், சுருக்கெழுத்தாளர் சங்க நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

சென்னையில் உள்ள தேசிய வேலைவாய்ப்பு சேவை மைய உதவி மண்டல வேலைவாய்ப்பு அதிகாரி திரு. சுஜித் குமார் சாஹூ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:- பிபிஓ / வங்கி / காப்பீடு / ஈ-வர்த்தகம் / கல்வி / தகவல் தொழில்நுட்பம் / விளம்பரம் மற்றும் எஃப்எம்சிஜி / மனிதவளம் / சந்தை மற்றும் விற்பனை உள்ளிட்ட துறைகளில் பல்வேறு தனியார் நிறுவனங்களில் காலி பணியிடங்கள் உள்ளன. மாத ஊதியம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையிலாகும். 20 முதல் 35 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் இதில் பங்கேற்கலாம்.  பட்டதாரிகளுக்கும், அதற்கு மேல் படித்தவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். எனினும், ப்ளஸ் டூ / மேல்நிலைக்கல்வி பயின்றவர்களும் பதவிகளுக்கு தகுந்தவர்கள் என்றால், பரிசீலிக்கப்படும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விண்ணப்பதார்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றாலும், பொதுவான விண்ணப்பதார்களுக்கு தேவைப்படும் கல்வித் தகுதியும், அனுபவமும் இருக்குமானால், பரிசீலிக்கப்படும். அவர்களும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் வேலைவாய்ப்பு முகாமிற்கு நேரடியாக வரலாம்.

மேலும், வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வோர். தேசிய வேலைவாய்ப்பு சேவை (என்சிஎஸ்) இணையதளத்தில் இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவுக்கு விண்ணப்பதாரர்கள் ஆதார் எண்ணை கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். சென்னை தியாகராய நகர், சிவா விஷ்ணு கோவிலுக்கு பின்புறமுள்ள சுருக்கெழுத்தாளர் சங்கத்தில் இந்த முகாம் நடைபெறுகிறது என தெரிவித்துள்ளார்.

தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 044-24615112 & 044-24342421, 24337387