அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ – உயிருக்கு பயந்து 7வது மாடியில் இருந்து குதித்த 3 பேர் பலி

Scroll Down To Discover
Spread the love

டெல்லி அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள துவாரகா பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.தீயில் இருந்து தப்பிக்க 7-வது மாடியில் உள்ள பால்கனியில் இருந்து யாஷ் யாதவ் மற்றும் அவரது 10 வயது மகன், மகள் ஆகிய 3 பேர் குதித்தனர்.

இதில் படுகாயம் அடைந்த அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 3 பேரும் உயிழந்தனர்.தீ விபத்தில் யாதவ் மனைவியும், மூத்த மகனும் உயிர் தப்பித்தனர். இவர்கள் லேசான காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். உயிருக்கு பயந்து மாடியில் இருந்து குதித்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் டெல்லியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.