முடா ஊழல் வழக்கு.. சித்தராமையாவின் ரூ.100 கோடி சொத்துக்கள் முடக்கம் – அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை..!

Scroll Down To Discover
Spread the love

கர்நாடகா முதல்வர் சித்தராமையா தொடர்புடைய ‘மூடா’ ஊழல் வழக்கில், 100 கோடி ரூபாய் மதிப்புடைய 92 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இதுவரை இந்த வழக்கில் ரூ.400 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளது.

கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா மைசூரு நகர்ப்புற வளர்ச்சி அமைப்பின் (MUDA) நிலம் தொடர்பான மோசடி வழக்கை எதிர்கொண்டு வருகிறார்.14 வீட்டுமனைகளை சித்தராமையா மனைவி பார்வதி பெற்றதில் முறைகேடு நடைபெற்றதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியது.

அதாவது, பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் வளர்ச்சியடையாத பகுதியில் உள்ள நிலத்துக்கு பதிலாக நன்கு வளர்ச்சியடைந்த நகர்ப் பகுதியில் 38,284 சதுர அடி நிலம் வழங்கப்பட்டது என்றும் இதனால் அரசுக்கு ரூ.4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், முடா வழக்கில் சித்தராமையாவின் 100 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடங்கியுள்ளது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “முடா வழக்கு தொடர்பாக சித்தராமையாவின் ரூ.100 கோடி மதிப்பிலான 92 அசையா சொத்துக்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. சித்தராமையா தவிர்த்து இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களிடம் இருந்து ரூ.400 கோடி அளவுக்கான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.