எல்லையோர மாநிலமான பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி வீரர்களுடன் கலந்துரையாடினார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. இந்தியா-பாக்., போரில் பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளம் முக்கியப் பங்காற்றியது. இந்த விமானப்படை தளத்தில் இருந்து வீரர்கள் பாகிஸ்தானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை துல்லியமாக சுட்டு வீழ்த்தினர்.
தற்போது இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இன்று (மே 13) ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி வீரர்களுடன் கலந்துரையாடினார். பிரதமர் மோடிக்கு பாகிஸ்தானுக்கு அளித்த பதில் தாக்குதல் குறித்து வீரர்கள் விளக்கம் அளித்தனர்.
விமானப்படை தளத்தில் வீரர்களுடன் பிரதமர் மோடி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. தற்போது இந்த புகைப்படம் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.இந்த விமானப்படை தளத்தை தான், பாகிஸ்தான் ராணுவம் குண்டு வீசி அழித்து விட்டதாக முற்றிலும் பொய்யான தகவல்களை பரப்பியது. அதை பொய் என்று நிரூபிக்கும் வகையில், இன்று பிரதமர் மோடியின் பயணம், வீரர்களின் கலந்துரையாடல் அமைந்துள்ளது.
பிரதமர் மோடி வீரர்களுடன் கலந்துரையாடினார் அப்போது அவர் பேசியதாவது:-
https://twitter.com/i/status/1922230400794992765
முப்படைகளுக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன். உங்களை பார்ப்பதில் எனக்கு பெருமையாக உள்ளது. உலகமே உங்களை பாராட்டுகிறது. பயங்கரவாதத்தை மண்ணோடு மண்ணாக்கினோம். நம்மை அழிக்க நினைத்தவர்களை நீங்கள் அழித்தீர்கள். எல்லையை பாதுகாக்கும் ஒவ்வொருவருக்கும் இந்தி வெற்றியை சமர்ப்பிக்கிறேன்.
போரின்போது நாடெங்கும் பாரத் மாதாகி ஜே என்ற முழுக்கம் எதிரொலித்தது. பாகிஸ்தானின் தாக்குதலை நாம் வெற்றிகரமாக கையாண்டோம். இந்தியாவின் சேனைக்கு அவர்கள் சவால் விடுத்தனர். அணு ஆயுத பூச்சாண்டி இனிமேல் செல்லுபடியாகாது.
நமது விமானப்படை பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியிருக்கிறது. உங்களுக்கு நிகர் யாருமில்லை. பயங்கரவாதிகளை நீங்கள் அழித்தீர்கள். அவர்கள் வீட்டுக்குள் புகுந்து நாம் அடிப்போம், அவர்கள் தப்பிக்க நாம் வாய்ப்பு தரமாட்டோம். இனி தாக்குதல் நடந்தால் நமது விருப்பப்படி திருப்பி அடிப்போம். இன்னொரு பயங்கரவாத தாக்குதல் நடந்தால் சரியான பதிலடி கொடுப்போம்.
பாகிஸ்தானின் ட்ரோன்கள், விமானங்கள் எதுவும் நம்மிடம் தாக்கு பிடிக்க முடியவில்லை. இந்தியர்களை தொட நினைத்தவர்களுக்கு ஒரே முடிவுதான் பேரழிவு. 100க்கும் மேலான விமானப்படை ராணுவப்படை இடையேயான ஒருங்கிணைப்பு மிகச்சிறப்பாக இருந்தது.
பாகிஸ்தானுக்கான நமது லட்சுமண ரேகை தெளிவாக உள்ளது. ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு போர்க்கலையில் புதிய அத்தியாயத்தை இந்தியா நிகழ்த்தியுள்ளது.நமது படையினர் பொறுப்புடன் செயல்பட்டு பயணிகள் விமானத்தின் மீதான தாக்குதலை தவிர்த்தனர்.
விமானப்படையால் தரவுகள், ட்ரோன்களை கொண்டும் தாக்குதல் நடத்த முடியும். நமது அதிநவீன தொழில்நுட்பத்துடன் பாகிஸ்தான் போட்டி போட முடியாது. உலகத்தரமான தொழில்நுட்பம் நம்மிடம் உள்ளது. அதை கையாளும் தனித்திறமையும் நம்மிடம் உள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாடு எடுத்தால் அதற்கான பதிலடி கடுமையாக இருக்கும். விமானப்படையால் தரவுகள், ட்ரோன்களைக்கொண்டும் தாக்குதல் நடத்த முடியும்.நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.
இது புதிய இந்தியா என்பதை எதிரிக்கு எப்போதும் நினைவுப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். இந்த மன உறுதியை அப்படியே தக்க வைத்துக்கொள்ளுங்கள். இனி இந்திய ராணுவத்தின் நகர்வு கடுமையாக இருக்கும். சண்டை நிறுத்தம் சிறிய இடைவெளிதான் பாகிஸ்தான் தாக்கினால் தக்க பதிலடி கொடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.முடிவில் வந்தே மாதரம்… வந்தே மாதரம் ..ஜெய்ஹிந்த் என்று பிரதமர் மோடி உரக்க குரல் எழுப்பினார். வீரர்களும் பதிலுக்கு உற்சாகமாக குரல் எழுப்பினர்.பாகிஸ்தான் அழித்ததாக கூறிய எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்பு முன்பு நின்று பிரதமர் மோடி உரையாற்றினார்.

														
														
														
Leave your comments here...