வெளியான சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் – தேர்ச்சி விகிதத்தில் மாணவிகள் முன்னிலை..!

Scroll Down To Discover
Spread the love

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் உள்ள பள்ளிகளில் படித்த 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டுக்கான பொது தேர்வு நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி, மார்ச் மாதம் முடிவடைந்தது. அதே போல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு ஏப்ரலில் முடிவடைந்தது.

இந்த நிலையில் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. 93.60% மாணவர்கள் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட 0.06% அதிகரித்துள்ளது.

மாணவிகள் 95% பேர் தேர்ச்சி பெற்று மாணவர்களைவிட 2.37%-த்துடன் முன்னணியில் உள்ளனர். குறிப்பாக சென்னை மண்டலத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வெழுதிய 98.71 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் சென்னை மண்டலம் 98.71 சதவீதத்துடன் 4-வது இடத்தில் இருக்கிறது.தேர்ச்சி பெற்றவர்களில் 90 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்கள் 1 லட்சத்து 99 ஆயிரத்து 944 பேரும், 95 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் 45 ஆயிரத்து 516 பேரும் ஆவார்கள்.

தேர்ச்சி சதவீதத்தில் நாட்டில் தென் மாநிலங்களில் தான் அதிக தேர்ச்சி இருக்கிறது. அதாவது, தமிழ்நாடு கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில் 95 சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி பெற்றிருக்கின்றன. மற்ற மாநிலங்கள் அதைவிட குறைவாகவே தேர்ச்சி சதவீதம் பெற்றுள்ளன.

வெளியாகியுள்ள சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை cbseresults.nic.in, result.cbse.nic.in, cbse.gov.in ஆகிய இணையதளங்களின் வாயிலாக மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.