மஹா கும்பமேளா – திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பூட்டான் மன்னர்..!

Scroll Down To Discover
Spread the love

உத்தர பிரதேசத்தில் நடக்கும் மஹா கும்பமேளாவில் பூட்டான் மன்னர் ஜிக்மி கெய்சர் நெம்கியால் வாங்சுங் புனித நீராடினார்.

உ.பி.,யின் பிரயாக்ராஜில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில், 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மஹா கும்பமேளா நிகழ்வு ஜன., 13ல் துவங்கியது. வரும் 26 வரை இந்த நிகழ்வு நடக்கவுள்ள நிலையில், இதுவரை, 30 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடி உள்ளனர். உள்நாட்டில் இருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர் மஹா கும்ப மேளாவில் பங்கேற்று புனித நீராடி வருகின்றனர்.

இந்நிலையில் பூட்டான் மன்னர் ஜிக்மி கெய்சர் நெம்கியால் உத்தரபிரதேச மாநிலம் ல்னோ வந்தார். அவரை முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். இன்று மஹா கும்ப மேளாவில் பங்கேற்று புனித நீராடினார்.

அப்போது காவி உடை அணிந்து பயபக்தியுடன் சூரியனை வழிபட்டு ‘அர்க்யா’ எனப்படும் சடங்குகளை செய்தார். . பூட்டான் மன்னருடன் முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் புனித நீராடினார். முன்னதாக மஹா கும்பமேளாவில் இதுவரை 37 கோடி பேர் புனித நீராடியதாக உ.பி .அரசு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.