60 ஆண்டுகளாக சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில் தினமும் தலித்துகளுக்கு எதிராக வன்முறைகள் – ஆளுநர் ஆர்.என்.ரவி

Scroll Down To Discover
Spread the love

60 ஆண்டுகளாக இரவும் பகலும் சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளும் தொடர்கின்றன’ என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வள்ளலார் அறக்கட்டளை நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:  தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. 60 ஆண்டுகளாக இரவும், பகலும் சமூக நீதி பேசும் தமிழகத்தில் தொடர்ந்து தலித்துகள் ஒடுக்கப்படுகிறார்கள்.

சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளும் தொடர்கின்றன. இன்றளவும் ஜாதிய ஏற்றத் தாழ்வுகள் உள்ளன. சமூகநீதியை பாதுகாக்க வள்ளலாரை பின்பற்ற வேண்டும். வள்ளலார் சனாதன தர்மத்தை மீட்டுள்ளார். ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கில மொழி மேம்படுத்தப்பட்டது. சமஸ்கிருதத்தை அழிக்கப் பார்த்தனர். ஆனால் வள்ளலார் மீட்டார். இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.