மத்திய அரசின் புனித யாத்திரை திட்டம் – தமிழ்நாட்டின் ஆலங்குடி குருபகவான் உள்பட 8 கோயில்கள் தேர்வு..!

Scroll Down To Discover
Spread the love

மத்திய அரசின் புனித யாத்திரை திட்டத்தில், தமிழகத்தின் ஆலங்குடி குருபகவான் கோயில், திருநாகேஸ்வரம் நாகநாதர் கோயில் உள்பட 8 கோயில்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக 2024-2025-ம் நிதி ஆண்டுக்கான சுற்றுலா துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: “மத்திய சுற்றுலா அமைச்சகம் தேர்ந்தெடுக்கப்பட்ட யாத்திரை தலங்களில் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த ‘புனித யாத்திரை, புத்துயிர் மற்றும் ஆன்மிகம், பாரம்பரியத்தை மேம்படுத்துதல் (PRASHAD)’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

இத்திட்டத்தில் தமிழகத்தில் திருவாரூர் ஆலங்குடி குருபகவான் கோயில், தஞ்சாவூர் கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோயில், திங்களூர் கைலாசநாதர் கோயில், திருநாகேஸ்வரம் நாகநாதர் கோயில், திருவிடைமருந்தூர் சூரியனார் கோயில், மயிலாடுதுறை கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோயில், திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வர் கோயில், வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதசுவாமி கோயில் ஆகிய 8 இடங்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன.

இந்த திட்டத்துக்காக ரூ.45 கோடியே 34 லட்சம் கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு நிதி அனுமதிக்காக மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.” என்று அதில் கூறப்பட்டுள்ளது.