உள்ளாட்சித் தேர்தலில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 21வயது இளம்பெண் சந்தியா புதிய சாதனை..!

Scroll Down To Discover
Spread the love

தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த டிசம்பர் மாதம் 27, 30 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் நடைபெற்றது இத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர், பஞ்சாயத்துத் தலைவர், ஒன்றிய வார்டு கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு இந்தத் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் கிருஷ்ணகிரி கே.என். தொட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்ட 21 வயது கல்லூரி மாணவி ஜெய்சந்தியா ராணி வெற்றி பெற்றார். ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜெய்சந்தியா ராணி, கர்நாடக மாநிலம் மாலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தந்தை ஜெயசாரதி, ஏற்கனவே கே.என்.தொட்டி கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவராகப் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம், மாநிலத்திலேயே இளம் வயதில் பஞ்சாயத்துடத தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.