சென்னையில் NIA அதிகாரிகள் சோதனை – போலியாக ஆதார் அட்டை தயாரித்து வங்காளதேச நாட்டினர் கைது..!

Scroll Down To Discover
Spread the love

சென்னையில் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ) அதிகாரிகள் புதன்கிழமை அதிகாலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.சென்னை புறநகர் பகுதிகளான பள்ளிக்கரணை படப்பை, பெரும்பாக்கம், மறைமலைநகர் உள்ளிட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள முன்னா வீட்டிலும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் உள்ள நபர்களின் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும், சோதனைக்கு பின்னரே முழுமையான தகவல் அளிக்கப்படும் என என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், ஏன்.ஐ.ஏ சோதனை நடைபெற்று வரும் நிலையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். படப்பையில் நடைபெற்ற சோதனையில் வங்காள தேசத்தை சேர்ந்த சபாபுதீன் என்பவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர் போன்று போலியாக ஆதார் அட்டை தயாரித்து பணி செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதைபோல மறைமலைநகர் பகுதியில் ஜூஸ் கடையில் வேலை செய்து வந்த முன்னா, மற்றும் அவருடன் தங்கி இருந்த மியான் ஆகியோரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.