கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் திடீர் துப்பாக்கிச் சூடு – இருவர் கைது.!

Scroll Down To Discover
Spread the love

கேரள மாநிலம் வயநாட்டில் கேரள மாநில காவல்துறையின் சிறப்புப்படைக்கும்- மாவோயிஸ்ட்களுக்கும் இடையில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இறுதியில் இரண்டு மாவோயிஸ்ட்கள் கைது செய்யப்பட்டனர்.

கோழிக்கோடு மாவட்டம் அருகே மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவான நபர் மூலம், தலப்புழா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருப்பதாக புலனாய்வுத்துறை தெரிந்து கொண்டது.அதன்பேரில் தலப்புழா காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் காவல்துறையின் சிறப்புப்படை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.

அப்போது செல்போனுக்கு ரீசார்ஜ் செய்யவதற்காக ஒரு வீட்டில் ஐந்து நக்சலைட்டுகள் நுழைந்ததை கண்டுபிடித்து, அந்த வீட்டை சுற்றி வளைத்தது.அப்போது வீட்டில் இருந்த நக்சலைட் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

இதில் மூன்று நக்சலைட் தப்பி ஓடிவிட்டனர். ஆனால் ஒரு ஆண், ஒரு பெண் என இரு நக்சலைட்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.