நாடாளுமன்றத்தில் வ.உ.சி வெண்கல சிலை – கொள்ளுப்பேத்தி செல்வி கோரிக்கை..!

Scroll Down To Discover
Spread the love

நாடாளுமன்றத்தின் வளாகத்தில் வ.உ.சியின் வெண்கல சிலை நிறுவ வேண்டும், அவரது பிறந்த நாளை வழக்கறிஞர் தினமாக அறிவிக்க வேண்டும் என்று வ. உ. சிதம்பரம்பிள்ளையின் கொள்ளுப் பேத்தி தெரிவித்துள்ளார்.

செக்கிழுத்தச் செம்மல் கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார் 152 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வ.உ.சி.யின் கொள்ளுப்பேத்தி செல்வி தனது வீட்டில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.

பின்னர் செல்வி செய்தியாளர்களிடம் கூறுகையில் “கிள்ளிகுளத்தில் உள்ள வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு வஉசி-யின் பெயரை சூட்டிய தமிழக முதல்வருக்கு இந்த நேரத்தில் வஉசி குடும்பத்தார் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.பாராளுமன்ற வளாகத்தில் வஉசி முழு உருவ வெண்கல சிலையை நிறுவ மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில்பட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்பட வேண்டும். மேலும் செப் 5 வழக்கறிஞர் தினமாக அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் முருகானந்தம், மருத்துவர் கபிலாஸ் போஸ், மோனிஷா, மாரிச்செல்வம், சோமசுந்தரம், வழக்கறிஞர் நாகராஜ் ,பாண்டியன் முத்துக்குமார் ஜவகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்