சனாதன ஒழிப்பு மாநாடு… தமிழகம் முழுவதும் போராட்டம் – இந்து மக்கள் கட்சி அறிவிப்பு..!

Scroll Down To Discover
Spread the love

சனாதன ஒழிப்பு மாநாட்டில், தமிழக அமைச்சர்கள் பங்கேற்றதற்கு கண்டனம் தெரிவித்து, இந்து மக்கள் கட்சியின் சார்பில், தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறும் என, அதன் தலைவர் அர்ஜுன்சம்பத் அறிவித்துள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன பேச்சு, விஸ்வரூபம் எடுத்து வருகிறது… “சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்… எல்லாவற்றையும் மாற்ற வேண்டும்.. எதுவுமே நிலையானது கிடையாது எல்லாவற்றுக்கும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் இந்த கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும்” என்று உதயநிதி பேசியிருப்பது தலைநகரை அசைத்து பார்க்க வைத்து வருகிறது.

மத்திய அமைச்சர்: அதனால்தான், மத்திய அமைச்சர் அமித்ஷாவே உதயநிதியின் பேச்சுக்கு எதிர்ப்பை பதிவு செய்யும் நிலைக்கு சென்றுள்ளார்.. மற்றொருபக்கம் உதயநிதி மீது போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.. போலீஸ்வரை புகார் சென்றாலும், உதயநிதி தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்.. இந்த உறுதிப்பாட்டை, மீண்டும் ஒருமுறை நேற்றைய தினம் அழுத்தமாக பதிவிட்டும் இருந்தார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அமைச்சர்கள் உதயநிதி, சேகர் பாபுஆகிய இருவரும் சென்னை காமராஜர் அரங்கில், சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரில், தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மற்றும் திராவிடர் கழகம் இணைந்து, மாநாடு மற்றும் கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் பங்கேற்று பேசியுள்ளனர்.

இது, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இருவரது அமைச்சர் பதவியையும், தமிழக முதல்வர் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இது போன்ற மாநாட்டிற்கும், கருத்தரங்கத்திற்கும் போலீசார் அனுமதி வழங்கியது தவறு. இந்து மதத்தை ஒழிப்போம் என்று சொல்லி, தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மற்றும் திராவிடர் கழகம் இணைந்து நடத்தியஇந்நிகழ்ச்சியில், தமிழகஅமைச்சர்கள் பங்கேற்றது மனவேதனை அளிக்கிறது.பெரும்பான்மையான ஹிந்து மக்களின் ஓட்டுக்களை பெற்று, ஆட்சியில் அமர்ந்து கொண்டு, ‘இந்துக்களை ஒழிப்போம், சனாதன தர்மத்தை ஒழிப்போம்’ என்று பேசிய இவர்களின் செயல், இந்துக்களை வெறுப்பதாக உள்ளது.பெரும்பான்மையான ஹிந்து மக்களின் மனதை புண்படுத்தும் செயல்.

இது, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறிய செயல்; பெருங்குற்றம். பங்கேற்ற இரு அமைச்சர்களின் பதவியை, தமிழக முதல்வர் தகுதி நீக்கம்செய்யாவிடில், இ.ம.க., சென்னை உயர்நீதிமன்றத்தை நாடும். தமிழகம் முழுக்க கண்டன போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, கூறியுள்ளார்.