அமமுக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் மீண்டும் தேர்வு..!

Scroll Down To Discover
Spread the love

அமமுக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தின்போது கட்சியின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.

இதுகுறித்து கட்சியின் தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள குறிப்பு: ”கழக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன், கழக தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.கோபால், கழக துணைத்தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.அன்பழகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை மேம்போக்காகக் கையாளும் திமுக அரசுக்குக் கண்டனம், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசுக்குக் கண்டனம், பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்திட மத்திய அரசுக்கு வலியுறுத்தல், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தல், என்எல்சி சுரங்க விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தல் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.