சென்னை- திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவை – 7-ந்தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

Scroll Down To Discover
Spread the love

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து கோயம்புத்தூர் வரை செல்லும் வந்தே பாரத் ரெயில் சேவையை கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி சென்னையில் தொடங்கி வைத்தார்.

இந்த ரெயில் சென்னையில் இருந்து காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், திருப்பூர் வழியாக கோயம்புத்தூர் வரை இரு மார்க்கமாகவும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் -திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த வந்தே பாரத் ரயிலை வரும் 7-ந்தேதி காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இருந்து நெல்லைக்கும் விரைவில் படுக்கை வசதியுடன் கூடிய புதிய வந்தே பாரத் ரெயில் இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.