உள்ளாட்சி தேர்தல் : 27 மாவட்டங்களுக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்..!

Scroll Down To Discover
Spread the love

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களுக்கு, ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், 27 மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தேர்தல் பார்வையாளர்களாக நியமித்து மாநில தேர்தல் ஆணையம் பட்டியல் வெளியிட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் இதுவரை பல்வேறு பதவிகளுக்கு 1,65,659 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.