சபரிமலைக்கு மாலை அணிந்திருக்கும் பக்தர்களை அவர்களது வீட்டில் உள்ள பெண்கள் கூட பார்க்க மாட்டார்கள்: பெண்கள் சபரிமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும்- பாடகர் கே.ஜே.யேசுதாஸ் அறிவுறுத்தல்..!

Scroll Down To Discover
Spread the love

இந்தியத் திரைப்படத்துறையில் புகழ்பெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகர் பாடகர் கே.ஜே.யேசுதாஸ் ஆவார். தனது கந்தர்வக் குரலால், தென்னிந்திய மக்களின் இதயங்களில் நிரந்தர இடம் பிடித்தவர். பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இரவில் நடை அடைக்கும்போது, ஐயப்பனை உறங்க வைப்பதற்காக பாடப்படும் ஹரிஹராசனம் பாடலை பாடிய புகழ் மிக்கவர்.

சென்னை தி.நகரில் இசை வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாடகர் யேசுதாஸ் :-

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து செல்கின்றனர் என்றும், முன்பெல்லாம் சபரிமலைக்கு மாலை அணிந்திருக்கும் பக்தர்களை அவர்களது வீட்டில் உள்ள பெண்கள் கூட பார்க்க மாட்டார்கள் எனவும் குறிப்பிட்டார். ஆனால் தற்போது காலம் மாறிவிட்ட நிலையில், பெண்கள் அணியும் உடை ஐயப்ப பக்தர்களின் மனதில் தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என்றும் தெரிவித்தார். எனவே சபரிமலைக்கு பெண்கள் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொண்ட கே.ஜே.யேசுதாஸ், பிற கோயில்களுக்கு பெண்கள் செல்லலாம் என தெரிவித்தார்.