வைரமுத்துவால் 17 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் – சின்மயியை தொடர்ந்து மேலும் ஒரு பாடகி பகிர் குற்றச்சாட்டு..!

Scroll Down To Discover
Spread the love

தமிழக அரசின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்துக்கு வீடு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு சிலர் ஆதரவு கொடுத்தாலும், சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே கவிஞர் வைரமுத்து மீதான பாலியல் புகார் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளது.

தமிழ் திரையுலகின் பிரபல பாடகியான சின்மயி, சில வருடங்களுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது ‘மீ டு’பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். வைரமுத்து அனுப்பிய மெயில் போன்றவற்றையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு அவர்மீது குற்றம் சாட்டினார்.

மேலும் கவிஞர் வைரமுத்துவால் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். சின்மயி மட்டுமல்லாமல் பலர் வைரமுத்து மீது குற்றம்சாட்டினர்.

அதன் பிறகு சினிமா துறையில் நடக்கும் பாலியல் அத்துமீறல் தொடர்பான பல விஷயங்கள் வெளியே வந்தது. இந்த நிலையில் தற்போது பிரபல பாடகி புவனா சேஷனும் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “17 பெண்கள் வைரமுத்திற்கு எதிராக பாலியல் குற்றசாட்டை முன் வைத்திருக்கின்றனர். ஆனால் 4 பேர் மட்டும்தான் தைரியமாக தங்களது பெயரையும் முகத்தையும் வெளி உலகத்திற்கு காட்டியுள்ளனர். பாலியல் வன்கொடுமை சூழ்நிலையில் இருந்து வெளியே வருவது என்பது மிகவும் கடினமான ஒன்று.

என்னுடைய கதையை நான் பகிர்வதற்கான நோக்கம் இளம் பாடகர்களின் கனவுகள் நசுக்கப்படுவதை நான் விரும்பவில்லை. எனக்கு நேர்ந்ததை போல பிற பெண்களுக்கு நடக்க நான் விரும்பவில்லை. பிரபல பாடகியான சின்மயி தொடர்ந்து வைரமுத்து மீதான குற்றசாட்டுகளை முன்வைக்கும் போது அவர் பலரால் விமர்சனம் செய்யப்பட்டார். சின்மயின் தைரியம் என்னை வியக்க வைக்கிறது.

இந்த சம்பவத்தில் பல பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் இது குறித்தான விசாரணை என்பது நடக்கபோவதில்லை, நடத்தவும் விடமாட்டார்கள்” என்று பேசினார்.