டிஜிட்டல் பரிவர்த்தனை தரவரிசை – முதலிடம் பிடித்த இந்தியா..!

Scroll Down To Discover
Spread the love

2022ம் ஆண்டின் டிஜிட்டல் பரிவர்த்தனை தரவரிசை பட்டியலில் இந்தியா முதலிடத்தையும், பிரேசில் 2வது இடத்தையும் மற்றும் சீனா 3-வது இடத்தையும் பிடித்துள்ளது

இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில், யுபிஐ மூலம் கூகுள் பே, போன் பே உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி, மக்கள் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்து வருகின்றனர். சில்லறை வணிக கடைகள் முதல் பெரிய கடைகள் வரை பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளுவதற்கு ஆன்லைன் செயலிகள் பயன்படுகின்றன.

இதனால் ரூபாய் நோட்டுகள் பயன்பாடு குறைந்து வருகிறது. மேலும் பேடிஎம், கூகுள் பே, போன் பே உள்ளிட்ட பணப் பரிவர்த்தனை செயலிகளை கிராமங்கள் உட்பட பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், மத்திய அரசு கடந்த 2022ம் ஆண்டிற்கான டிஜிட்டல் பரிவர்த்ததனை தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன்படி, டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 89.5 மில்லியன் பணப் பரிவர்த்தனைகள் இந்தியாவில் டிஜிட்டல் மூலம் நடைபெற்றுள்ளது.

இதுவரை எந்த நாடும் இப்படியொரு பரிவர்த்தனையை செய்ததில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த தரவரிசைப் பட்டியலில், 29.2 மில்லியன் பணப் பரிவர்த்தனைகளுடன் 2ம் இடத்தில் பிரேசிலும், 17.6 மில்லியன் பணப் பரிவர்த்தனைகளுடன் சீனா மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இவ்வாறு மத்திய அரசு வெளியிட்ட பட்டியலில் கூறப்பட்டுள்ளது.