கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் பலி – 4 போலீசார் சஸ்பெண்ட்..!

Scroll Down To Discover
Spread the love

கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் உயிரிழந்துள்ளதால், அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த சங்கர், சுரேஷ், தரணி வேல் உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழந்தனர்.

மேலும் 16 பேர் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உரிய விசாரணை நடத்த கோரி கிழக்க கடற்கரை சாலையில் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் தான் கலைந்து செல்வோம் என அவர்கள் கூறியதால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மரக்காணம் இன்ஸ்பெக்டர் அருள் வடிவேல் அழகன், மதுவிலக்கு கலால் காவல்துறை இன்ஸ்பெக்டர் மரிய ஷோபி மஞ்சுளா ஆகியோரை சஸ்பெண்ட் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.