பெட்ரோனாஸ், காட்டர்பில்லர் உள்பட 5 நிறுவனங்கள் தமிழகத்தில் தொடங்க ஒப்புதல்..!

Scroll Down To Discover
Spread the love

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் நிறைவுபெற்றது.தமிழக சட்டப்பேரவை 5-ஆவது கூட்டத் தொடரின் இரண்டாவது கூட்டம், கடந்த மாா்ச் 20-இல் தொடங்கி ஏப். 21 வரை நடைபெற்றது.

இதில் பல்வேறு துறைகளின் கீழ் ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.தொழில் துறையின் கீழ், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளா்கள் மாநாடு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தொழில் முதலீடுகளை ஈா்க்கும் பொருட்டு, முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா்கள் உள்ளிட்டோா் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வா் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில், முதல்வா் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று(மே 2) காலை 11 மணிக்கு நடைபெற்றது.இதில், பெட்ரோனாஸ், காட்டர்பில்லர் உள்பட 5 நிறுவனங்கள் தமிழகத்தில் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.மேலும், முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.