ஆப்கானிஸ்தானில் பெண்கள் ஓட்டல்களுக்கு செல்ல தடை..! தாலிபான்கள் அதிரடி

Scroll Down To Discover
Spread the love

ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில், புல்வெளிகளுடன் கூடிய உணவகங்களுக்குப் பெண்கள் தனியாகவோ, குடும்பத்துடனோ செல்லக் கூடாது எனத் தாலிபான்கள் தடை விதித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்து வரும் தலிபான்கள் அரசு, பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக பெண்களுக்கு பல தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பெண்களுக்கு மேலும் ஒரு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் வடமேற்கு ஹெராத் மாகாணத்தில் தோட்டங்கள் அல்லது இடங்களை கொண்ட உணவகங்களுக்கு குடும்பங்கள் மற்றும் பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. பெண்கள் சரியாக ஹிஜாப் அணியாததால் தடை கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் ஆண்களும், பெண்களும் சந்திக்கும் பூங்கா போன்ற பசுமையான பகுதிகளை கொண்ட உணவகங்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.