ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் : ரூ.40,700 கோடி கடனுக்கு ஒப்புதல் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Scroll Down To Discover
Spread the love

ஸ்டாண்ட் அப்’ இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.40,700 கோடி கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்துள்ளார்.

ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டத்தின் 7வது ஆண்டு நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் ரூ 40,700 கோடி கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பழங்குடியினர் பிரிவினருக்கு ரூ.1932.50 கோடி கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

எஸ்சி, எஸ்டி மகளிருக்கு பொருளாதார ரீதியில் அதிகாரமளிக்க துவங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் 1,80,630 தொழில்முனைவோர் உருவாக்கியுள்ளனர். அதில் 80 சதவீத மகளிர் பயனாளிகள் என்பது பெண்கள் முன்னேற்றத்தில் அரசின் அக்கறையை காட்டுகிறது.

இந்த திட்டம் 18 வயதுக்கு மேற்பட்ட மகளிர் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவில் தொழில் முனைவை மேம்படுத்துகிறது. உற்பத்தி, சேவைகள், வர்த்தக துறையில் பசுமை தொழில்கள் துவங்கவும், வேளாண்மை தொடர்பான நடவடிக்கைகளுக்கும் உதவுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.