கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்: பாஜகவிற்காக களத்தில் இறங்கும் நடிகர் சுதீப்..!

Scroll Down To Discover
Spread the love

கர்நாடகா சட்டசபை தேர்தல் வரும் மே 10ம் தேதி நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை மே 13ல் நடக்கிறது. இந்நிலையில் கன்னட திரைப்பட நடிகர் கிச்சா சுதீப் கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜ., வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

கிச்சா, நான் ஈ, புலி, பாகுபலி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த தென்னிந்திய திரையுலகின் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் நடிகர் சுதீப். கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அலைகள் பெருகி வருவதை கண்டா பாஜக அங்கு பிரபலமான நடிகர்களை அழைத்து வந்து பிரச்சாரத்தில் ஈடுபடுத்த முடிவு செய்தது. அதன்படி நடிகர் சுதீப்பை அணுகிய பசவராஜ் பொம்மை பாஜக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட கொட்டுகொண்டதாக கூறப்படுகிறது.

ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சுதீப் பாஜக-விற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய முன்வந்துள்ளார். இதனை செய்தியாளர்களிடம் கூட்டாக தெரிவித்தனர். கர்நாடக திரையுலகில் உச்சத்தில் உள்ள நடிகர் தர்ஷன் விரைவில் பாஜக-வில் இனைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆட்சியை தக்க வைக்க ஆளும் பாஜகவும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் போட்டி போட்டு திட்டங்களை வகுத்து வருகின்றன. கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.