மார்கழி பவுர்ணமி – சதுரகிரி கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய 4 நாள் அனுமதி..!

Scroll Down To Discover
Spread the love

மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாள், பிரதோஷத்திற்கு 2 நாள் என மாதத்திற்கு 8 நாள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறது. நாளை (ஜன.4) மார்கழி பிரதோஷம், 6ம் தேதி பவுர்ணமி வழிபாடு நடக்கிறது.

இதையொட்டி நாளை ஜன.4 முதல் 7ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். பிரதோஷம் மற்றும் பவுர்ணமி தினத்தன்று சுவாமிக்கு பால், பழம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடக்கின்றன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் ஆகியோருக்கு அனுமதி இல்லை.