முதல்முறையாக சிஆா்பிஎஃப் ஐ.ஜி.யாக பெண் அதிகாரிகள் நியமனம்..!

Scroll Down To Discover
Spread the love

ராணுவம், கடற்படை, விமானப்படை என அனைத்து பிரிவுகளிலும் பெண்கள் அதிகாரிகள், பைலட்டுகள் உள்பட பல பொறுப்புகளில் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், சிஆர்பிஎப்.பில் ஆனி ஆபிரகாம், சீமா துண்டியா என்ற 2 பெண் அதிகாரிகள் ஐஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிஆர்பிஎப்.பில் ஐபிஎஸ் பெண் அதிகாரிகள் 3 பேர் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வருகின்றனர். இருந்த போதிலும் முதல்முறையாக ஆனி ஆபிரகாம், சீமா துண்டியா ஆகியோர் ஐஜி.யாக நியமிக்கப்பட்டு உள்ளனர். கலவர தடுப்பு படைக்கு (ஆர்ஏஎப்) ஆனியும், பீகார் பிரிவுக்கு சீமாவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த 2 அதிகாரிகளும் சிறந்த சேவைக்கான ஜனாதிபதியின் விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளனர்.