இமாச்சலபிரதேச சட்டப்பேரவை தேர்தல் – டீக்கடைக்காரருக்கு சீட் வழங்கிய பாஜக.!

Scroll Down To Discover
Spread the love

இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 12-ம் தேதி நடக்க உள்ளது. அம்மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், சிம்லா நகர்ப்புற தொகுதியில் பாஜக தனது வேட்பாளராக டீக்கடை நடத்தி வரும் சஞ்சய் சூட்டை நிறுத்தி உள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. அத்தொகுதியில், 4 முறை எம்எல்ஏவாக இருந்தவரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ் பரத்வாஜ்க்குப் பதிலாக சஞ்சய் சூட்டை பாஜக நிறுத்தி உள்ளது.

சஞ்சய் சூட் 1980களில் பாஜவின் மாணவர் பிரிவான ஏபிவிபியில் இணைந்தவர். 2007ல் நடந்த கவுன்சிலர் தேர்தலில் பாஜ சார்பில் போட்டியிட்டார். வேட்புமனு தாக்கல் செய்த சஞ்சய் சூட், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கூறுகையில், ‘‘பாஜவில் மட்டுமே சாதாரண டீக்கடை தொழிலாளி கூட வேட்பாளராக களம் காண முடியும்’’ என்றார்.