நவராத்திரி விழா – துர்கா சிலைகள் கரைப்பின்போது ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மக்கள் – 8 பேர் உயிரிழப்பு

Scroll Down To Discover
Spread the love

நவராத்திரி விழாவையொட்டி துர்கா பூஜை பிரபலமாக நடைபெறும். இறுதியில் விநாயகர் சிலை கரைக்கப்படுவதுபோல துர்கா சிலைகளையும் கரைத்துவிடுவார்கள்.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரியில் உள்ள மால் ஆற்றில் துர்கா சிலை கரைப்பின்போது திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் பலர் சிக்கினர். இதுவரை 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் மாயமான பலரை தேடி வருகிறோம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


துர்கா சிலைகளைக் கரைகளைச் சென்று பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஆற்றில் துர்கா பூஜை சிலைக் கரைப்பு சம்பவத்தின்போது, கொத்து கொத்தாக மக்கள் அடித்து செல்லப்பட்ட காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.