ஐப்பசி மாத பூஜை – சபரிமலை அய்யப்பன் கோவில் வருகிற 17-ந் தேதி நடை திறப்பு.!

Scroll Down To Discover
Spread the love

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக வருகிற 17-ந் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து தீபாராதனை நடத்துவார். தொடர்ந்து 22-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை நடைபெறும். அன்றைய தினம் இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். முன்பதிவு செய்யும் அனைவருக்கும் தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டு உள்ளது.

அதே போல் நிலக்கல்லில் பக்தர்களின் வசதிக்காக உடனடி தரிசன முன்பதிவுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. கேரள அரசின் உத்தரவை தொடர்ந்து பக்தர்கள் முககவசம் அணிந்து வர திருவிதாங்கூர் தேவஸ்தானம் கேட்டுக்கொண்டு உள்ளது.