நாட்டின் 3-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் – பிரதமர் மோடி நாளை தொடக்கி வைக்கிறார் ..!

Scroll Down To Discover
Spread the love

காந்திநகர் மற்றும் மும்பை சென்டிரல் இடையேயான புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்துடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி நாளை கொடியசைத்து தொடக்கி வைக்கிறார்.

அடுத்த 3 ஆண்டுகளில் 400 புதிய தலைமுறைக்கான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரியில் பட்ஜெட்டின்போது, வெளியிடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக காந்திநகர் மற்றும் மும்பை சென்டிரல் இடையேயான புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்துடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி நாளை கொடியசைத்து தொடக்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சி நாளை காலை 10.30 மணியளவில் நடைபெறும். இதனை தொடர்ந்து, எக்ஸ்பிரஸ் ரெயிலில் காந்திநகரில் இருந்து காலுபூர் வரை பிரதமர் மோடி பயணம் செய்கிறார். இந்த ரெயில்களின் கூடுதல் சிறப்பம்சம், இதுவரை பயன்படுத்தப்பட்ட ஸ்டீலுக்கு பதிலாக எடை குறைந்த அலுமினியம் பயன்படுத்தப்படும். இதனால், 50 டன்கள் எடை குறைவதுடன், குறைவான அளவிலேயே ஆற்றலை உபயோகப்படுத்தும்.

பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கும் ரயில் நாட்டின் 3-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகும். இதற்கு முன்பு, புதுடெல்லியில் இருந்து வாரணாசி செல்லும் ரயில் 2019-ம் ஆண்டு பிப்ரவரியிலும், மற்றொரு ரயில் புதுடெல்லியில் இருந்து ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கத்ரா இடையே 2019-ம் ஆண்டு அக்டோபரிலும் தொடக்கி வைக்கப்பட்டது.