டிப்பர் லாரிகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்..!

Scroll Down To Discover
Spread the love

மதுரை மாவட்டம், திருமங்கலம் – விமான நிலைய சாலையில் காமராஜபுரம் வடபகுதியில் , ரயில்வே பணிக்காக கொட்டப்பட்டுள்ள சணல், மண் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்வதற்காக 50க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் நாள்தோறும் வந்து செல்வதால் , அப்பகுதியில் போடப்பட்டுள்ள தார் சாலை முழுவதும் சேதம் அடைந்து வீணாகி வருவதாக குற்றம் சாட்டுகின்றனர் அப்பகுதிவாசிகள்.

லாரிகளில் அதிக அளவில் சணல், மண்களை ஏற்றிக்கொண்டு மின்னல் வேகத்தில் 20 அடி சாலையை கடந்து செல்வதால், விபத்துக்கள் நிகழும் அபாயம் ஏற்படுவது உடன், சாலைகளை சேதப்படுத்தி மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாகவும் கூறுவதுடன் , இப்பகுதியில் டிப்பர் லாரிகளை அனுமதிக்க மாட்டோம் எனக் கூறியும் , சேதமடைந்த சாலையை சீரமைத்து தரவும் அப்பகுதிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, டிப்பர் லாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றன.