தமிழகத்தில் கடுமையான மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் – ராமதாஸ் எச்சரிக்கை !

Scroll Down To Discover
Spread the love

தமிழகத்தில் கடுமையான மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டர் பக்கத்தில் ‘மின்சார சந்தையில் வாங்கிய மின்சாரத்திற்காக மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.926 கோடியை செலுத்தத் தவறியதால், மின்சந்தையிலிருந்து மின்சாரம் வாங்கவும், விற்கவும் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது பெரும் பின்னடைவு ஆகும்.
https://twitter.com/drramadoss/status/1560478956662300672?s=20&t=uBB6rH_rPcbE8ITyrQZqyg
தமிழகத்தின் தேவையில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே தமிழக அரசால் உற்பத்தி செய்யப்படுகிறது. மத்திய அரசு, தனியார் நிறுவனங்களிடம் வாங்குவது தவிர, மின் சந்தையிலிருந்து மின்சாரத்தை வாங்கி தான், தமிழ்நாட்டின் மின்சாரத் தேவையை மின்வாரியம் சமாளித்து வருகிறது. தமிழகத்தில் காற்றாலை மின்னுற்பத்தி குறையத் தொடங்கியுள்ள நிலையில், மின்சார சந்தையில் மின்சாரத்தை வாங்க முடியாவிட்டால் தமிழகத்தில் கடுமையான மின்தட்டுப்பாடு ஏற்படக்கூடும். பொதுமக்களின் வாழ்க்கையை மட்டுமின்றி, தொழில் உற்பத்தி மற்றும் வணிகத்தையும் இது பாதிக்கக் கூடும். மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கான நிலுவையை மின்வாரியம் உடனடியாக செலுத்தி தடையை விலக்கச் செய்ய வேண்டும்.

மேலும், தமிழகத்தில் மின்தடை ஏற்படாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்’ என்று டாக்டர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.