சொரிமுத்து அய்யனார் கோவில் திருவிழா: கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவு

Scroll Down To Discover
Spread the love

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் பகுதியில் அமைந்துள்ளது காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில். இக்கோவில் திருவிழாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து புலிகள் காப்பக துணை இயக்குநர் செண்பகபிரியா உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, கோவில் திருவிழாவுக்கு தனியார் வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை. இதற்கு மாற்று ஏற்பாடாக அகஸ்தியர்பட்டியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தனியார் வாகனங்களை நிறுத்திவிட்டு அரசுப் பேருந்துகளில் கோவிலுக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் அனைவரும் கோவிலுக்கு வரும்பொழுது கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். ஆற்றில் குளிக்கும் பக்தர்கள் , குழந்தைகள் , சிறுவர்கள் அபாயகரமான |பகுதிகளில் குளிப்பதற்காக செல்லக் கூடாது. பக்தர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் தனியாக ஒரு குப்பை சேகரிக்கும் பை/Garbage bag – ஐ வைத்துக்கொண்டு வனப் பகுதிகளில் குப்பைகளைக் கொட்டாமல் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் போடவேண்டும். வற்றாத தாமிரபரணி ஆற்றில் தண்ணீரை அசுத்தம் செய்யாமல் சோப்பு , ஷாம்பு மற்றும் இதர ரசாயன பொருட்களை கலந்து மாசுபடுத்தாமல் சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும்.

பக்தர்கள் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைதல் கூடாது. VIP , VVIP பாஸ் ஒருமுறை மட்டுமே செல்லத்தக்கது. மறுமுறை பயன்படுத்த அனுமதி இல்லை. பாஸ் உள்ள வாகனங்கள் முக்கியஸ்தர்களை கோவிலில் இறக்கிவிட்டு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்த வேண்டும். ஜூலை 25 ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை அம்பாசமுத்திரம் கோட்டத்தில் (மணிமுத்தாறு மற்றும் அகஸ்தியர் அருவி) சூழல் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.